மட்டுமேவாழும்உலகமாகஒருநொடியில்மாற்றிஇருப்பார்களே!
 
 
சில பெற்றோர்கள்….
தமது குழந்தைகளை வளர்க்கவேண்டிய சிறுபிராயத்தில்
நெறிப்படுத்தி சரியாக வளைத்து வளர்க்காமல், பெரிய மரமானபிறகு அவர்களை நிமிர்த்தி நேராக்க கடும் முயற்சி செய்கின்றனர்.
முற்பகல் செய்தவை யாவும் பிற்பகலில் விளைவது இயற்கையின் நியதி!
சிறுவயதில் குழந்தைகளை ஒரு அடிமை போல் எண்ணி அடித்தும், உதைத்தும், திட்டியும், அவமானம் செய்தும் சோறு போட்டு உடல் மட்டும் வளர்த்துவிட்டு, பிறகு அந்தக் குழந்தைகள் சிந்திக்கும் பெரியபருவம் வந்ததும் எதிர்த்து பேசி ஏடாகூடம்
செய்வதைக்கண்டுஅத்தகைய பெற்றோர்கள் அதிர்ச்சி அடைகிறார்கள்.
பிறகு, அந்த இளைஞனை அல்லது இளைஞியை குணப்படுத்த அங்கும் இங்கும் அழைத்துசென்று ஆண்டுக்கணக்கில் ஓடிஅலைகிறார்கள்; பெரும் செலவு செய்தும் குணமடையாதது கண்டு உளம் வெதும்பி
கண்ணீர் வடிக்கிறார்கள்!
 
“எத்தைத்தின்றால்பித்தம்தெளியும்” என்றநிலையில்வசியம், மாந்திரிகம், வேள்விகள்செய்தல், கோவில்குளம்சுற்றுதல், பெயர்மாற்றுதல், வாஸ்து பார்த்தல், வண்ணக்கற்களில்மோதிரம்அணிதல், சாமியார்கால்களில்விழுதல், யோகாதியானம்செய்தல், அதுஇதுஎன்றுபாவம்நேரம்-பணம்-சக்தியைவிரயம்செய்கிறார்கள்.
 
மேற்படி “நிபுணர்களும்…??”, மணலைகயிறாகத்திரித்து, வானத்தை வளைப்பதாகஉறுதிகூறிநாட்களைகடத்திபணம்பறிக்கிறார்கள்! பணம் பறிக்காதசிலர் “புகழ்” பறிக்கஇதுபோன்றஉத்திகளைகையாள்கிறார்கள்! நூற்றில்ஒருவர் “காக்கைஉட்காரபனம்பழம்விழுந்தகதையாய்” கொஞ்சம் சரியானதுபோல்தோன்றினால்கூடஅவர்கள்மூலம்மேலும்கூட்டம்சேர்ந்து “நிபுணர்” புகழ்அடையஆரம்பித்துவிடுவார்.
 
செய்தி நிறுவனங்கள், மற்றும்அறிவியல்ஆய்வுக்கழகங்களுக்குஇதில்எந்தவிதசமூகப்பொறுப்பும்
இருப்பதில்லைஎன்பதுஆச்சர்யமானவிஷயம்!
 

அறிவியல்என்பது, பயன்நோக்கம்உடையது.
நூற்றுக்குநூறுபேர்பயன்பெறுகிறார்களாஎன்று
உறுதிசெய்யவேண்டியதுஅறிவியலின்கடமை.

குறைந்ததுநூற்றுக்குதொண்ணூறுபேர்பயன்அடிகிறார்கள், அட! குறைந்தபட்சம்எழுபது சதவிகிதம் பேர், என்றால்பரவாயில்லை! கண்பார்வைகுறைபாடுக்குசென்றநூறுபேரில்பத்துபேர்ஏதோகொஞ்சம்

பார்வைபெற்று, அந்தபத்துபேர்நூறுபேரைகூட்டிவரும்வியாபாரமாக இந்தக் கலி காலம் மாறிவிட்டது! மற்றபடிஅந்தநூறுபேரில்தொண்ணூறுபேர்பார்வைபறிபோனதுபற்றி

அல்லதுசரியாகததுபற்றிஎவருக்கும்எந்தஅறிவியலாளர்களுக்கும்இந்த

உலகத்தில்அக்கறைஇல்லைஎன்பதுமகாவிந்தை-வெட்கக்கேடு!

 
பெற்றோர்களும் “கூடுவிட்டுகூடு” பாய்வதைபோல, ஆட்களைமாற்றிக் கொண்டு, “நாங்கதான்சரியில்லை! “அவங்கசொன்னமாதிரிஎங்களாலதான்சரியாக “follow” பண்ணமுடியல” என்றுபேதைகளாகபிதற்றித்திரிவார்கள்!
 

ஆனால், அந்தவாலிபனோஉள்ளுக்குள்சிரித்துக்கொண்டேஒருவிதபழிவாங்கும்

உணர்வோடுபெற்றோர்களின்விருப்பத்துக்குஎதிராகசெயல்பட்டுதன்கடந்த

காலத்தைபழிதீர்த்துக்கொள்கிறான்.

அவனுக்குதான்நலமடைவதைவிடகெட்டவனாகஇருந்துதன்பெற்றோர்களை

பழிவாங்குவதேதலையாயஇலட்சியமாய்இருக்கிறது.

 
இதுபோன்றமனநோயாளிகளையும் மற்றும் பிறவிக் கோளாறுடன் பிறந்த பிணியாளர்கள்-ளையும் எந்தமனோதத்துவநிபுணர்களாலும்குணப்படுத்தஇயலாது.
 
அறுவைசிகிச்சைமேடைக்குஒருஉடம்புவந்துசேராமல்எப்படி
அறுவை-சிகிச்சைசெய்யமுடியாதோ, அதேபோன்று, தான்நலம்அடையவேண்டும்என்றபூரணஎண்ணம்இல்லாதஒருமனிதனை
வலுக்கட்டாயமாககூட்டிவந்துஇந்தஉலகத்தின்எந்தவொருசிறந்த
மனநலமருத்துவராலும்குணப்படுத்தஇயலாது.
“தான்ஏதோஒருவகையில்சரியில்லை”. “கொஞ்சமாவது நான் மாறவேண்டும்”,என்றஎண்ணம்இல்லாதஎந்தமனிதனையும்எந்தபுத்தராலும்மாற்றஇயலாது- அப்படி மாற்றுவதும் வழக்கத்தில் இல்லை.

அப்படிஇருந்திருந்தால்இந்நேரம்எத்தனையோஞானிகள்இந்தஉலகத்தை “நல்லவர்கள்” மட்டுமேவாழும்உலகமாகஒருநொடியில்மாற்றிஇருப்பார்களே!

 
“தட்டுங்கள்-திறக்கப்படும்!
கேளுங்கள்-கொடுக்கப்படும்!” என்பதுவிவிலியம்கூறும்ஒருநல்மொழி!
 
பாருங்கள்! கடவுளே சொல்கிறார்,
” நீதட்டு- நான்என்கதவைதிறக்கிறேன்!
“நீகேளு! நான்என்னிடம்உள்ளதைதருகிறேன்”, என்று!
அதாவது, யாரும்கேட்காமல்….. இங்குஎதுவும்கிடைக்காது, என்பது இவ்வுலகத்தின்தெளிவானதொருவேதம்.
 
அதுபுரியாமல்தான்மாறவேண்டும்என்றதீவிரவிருப்பமும், தகிக்கும் ஆசையும்இல்லாதஒருமனிதனைமாற்றமுயற்சிப்பதுவீண்வேலைஆகும்!
அதுஒருவீண்வேலைமட்டுமல்ல-காலவிரயம், சக்திவிரயம், பொருள்விரயம்!
 
ஆகவே! என்அருமை “யோஜென்” விரும்பிகளே!
அப்படிப்பட்ட, மாறவிருப்பம்இல்லாதஒருஜீவனையாரும்தயவுசெயதுஇங்கு
கூட்டிவரவேண்டாம்!
 
நாம் செய்யவேண்டிய நியாயமான பணிகளே இந்த உலகத்தில் ஆயிரம் உள்ளன!
 
எனவே, வலியோடும் துன்பத்தோடும் அழுபவர்களின் கண்களைத் துடைக்க
இந்த எனது கரங்கள் பயன்படட்டுமே!
 
மற்றபடி, பெற்றோர்கள்அல்லதுஉடன்பிறந்தவர்களை வேண்டுமென்றேஅழவைத்துக்கொண்டுஇருக்கும்
“தன்-முனைப்பு-ஜீவன்கள்”-ளை (Egocentric Psychopaths) காலம் மட்டுமே, தக்கசமயத்திலோ அல்லது அடுத்த
ஜன்மத்திலோ நெறிப்படுத்த இயlum!
மற்றபடி நான்
அல்லது நாம் உதவி செய்ய
அங்கு ஒன்றுமே இல்லை என்பதுதான்
கசப்பான உண்மையாகும்!

 

– மோகன் பாலகிருஷ்ணா